டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 11ந்தேதி (ஜூலை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு உள்ளது. இதையடுத்து இபிஎஸ் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த விவகாரம் மற்றும் வங்கி விவகாரங்களில், எடப்பாடிக்கு சாதகமாகவே முடிவுகள் வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தங்களது வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  தெரிவித்துள்ளது.