ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ சீரிஸ் ‘முனி’ யின் நான்காம் பாகமாக உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வெளிநாடுகள் என மொத்தம் 2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது .

பேய் படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகும் என்பதை நிரூபித்து காட்டியதோடு, தமிழ் சினிமாவின் டிரெண்ட்டாகவும் மாற்றியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது. லாரன்ஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.