’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’ முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி

Must read

’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’  முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி

16- வது நாடளுமன்றத்தின் கடைசி கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.எம்.பி.க்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனர்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

‘’இந்த அவையில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் மீண்டும் எம்.பி.யாக தேர்வாகி இங்கே வர வேண்டும்’’ என்று அருள் வாக்கு கொடுத்த முலாயம் ,அடுத்து வெடித்தது-பொக்ரான் ரக குண்டு.

‘’பிரதமர் மோடி அனைவரையும் அரவணைத்து செல்கிறார். மீண்டும் பிரதமராக மோடியே வர வேண்டும்’’ என்று வாழ்த்தி விட்டு அமர –எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஸ்தம்பித்து போனார்கள்.

முலாயம் சிங்கின் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சோனியாவும் திகைத்து போனார்.அவர் முகம் இருண்டது.

மோடியை அகற்ற முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் உ.பி.யில் மெகா கூட்டணியை அமைத்து – கடுமையாக போராடிக்கொண்டிருக்க-

அப்பாவோ-  மோடிக்கு ஆசீர்வாதம் செய்திருப்பது-

அகிலேஷை மட்டுமல்ல- அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிற வைத்துள்ளது.

‘’முலாயம் எப்போதும் இப்படித்தான்.கடந்த முறை நடந்த கடைசி கூட்டத்திலும், மன்மோகன் சிங்  மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று வாழ்த்தினார் ’’ என்று கேஷுவலாக சொல்லி விட்டு –நாடாளுமன்ற வளாகத்தை கடந்தார்- சரத்பவார் மகள் சுப்ரியா.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article