க்னோ

ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார்.

இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண சர்வதேச மையத்தின் வாயிலை பாதுகாப்பு காரணமாக உத்தரப்பிரதேச அரசு மூடியது.

மேலும் இந்த சர்வதேச மையத்தில் நுழையவும், அங்குள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மாலை அணிவிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.   இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவருடைய கட்சியினர் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் தடையை மீறித் தடுப்பு சுவர் மீது ஏறிக்குதித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் புகுந்தனர். பிறகு அங்குள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு சமாஜ்வாடி கட்சியினர் மரியாதை செலுத்தினர். அங்கு கடும் பரபரப்பு நிலவியது.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதிக்கும் படம் சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.