அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வேறு சில காரணங்களால் தள்ளிப்போனது.
பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ள இந்தப் படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. வெளிநாடுகளில் இதற்காக ப்ரீ-புக்கிங்களும் துவங்கியுள்ளது.
படம் ரிலீசாக இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முன்பதிவு வசூல் ரூ. 2.69 கோடியாகவும் வெளிநாடுகளில் ப்ரீ-புக்கிங் வசூல் ரூ. 3.5 கோடியாகவும் உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் அஜித் படம் வெளியாவதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார், இவர்களுடன், ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.