‘தல’ என்று அழைப்பதை நிறுத்துமாறு அஜித் வேண்டுகோள்

Must read

2001 ம் ஆண்டு வெளியான தீனா படத்திற்கு பிற கடந்த 20 ஆண்டுகளாக நடிகர் அஜித்-தை அவரது ரசிகர்கள் ‘தல’ என்று அழைத்துவருகிறார்கள், இந்நிலையில் தன்னை ‘தல’ என்று அழைப்பதற்கு முழுக்குபோட அனைவருக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

அஜித் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் உண்மையான ரசிகர்கள் இனிமேல் என்னை அஜித், அஜித் குமார் அல்லது ஏ.கே. (AK) என்று அழைக்க விரும்புகிறேன், ‘தல’ என்றோ அல்லது வேறு அடைமொழியுடனோ அழைக்க வேண்டாம்.

என் பெயருக்கு முன்னாள் எந்த பட்டமும் போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜீத்குமாரின் ‘வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் அன்று திரையரங்குகளில் வர உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் அஜித், ஹுமா குரேஷி, யோகி பாபு மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்துள்ளனர்.

வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 2 வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article