‘தளபதி’ விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’ சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

100வது நாள் படப்பிடிப்பின் போது இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த நடிகர் விஜயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே டாக்டர் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடல் எழுதிய நிலையில் இப்போது விஜய் ரசிகர்களை மகிழ்விக்க மற்றொரு பாடலை எழுதியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022 ம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன், வி டி வி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது.