உலகக் கோப்பை டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட்….!

Must read

தல அஜித்தின் ரசிகர்கள் படக்குழுவிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து பல்வேறு விதங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அதை படத்திற்கு சம்பந்தமே இல்லாத பிரபலங்களிடம் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் வலிமை. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியிடம் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர் தல ரசிகர்கள். மோடியிடம், தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காட்டியுள்ளனர் .

இதைத் தாண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.

அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டியில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனிடம் தமிழக ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

More articles

Latest article