டிகர் அஜித்குமாருக்கு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவா, அடுத்து நடிகர் விஜயை வைத்து புதிய படம் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரம், விவேகம், விஸ்வாசம் என நடிகர் அஜித்துக்கு தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி கொடுத்த இயக்குனர் சிவா, அடுத்து நடிகர் விஜய் படத்த இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஸ்வாசம் படத்தை இயக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க இருப்பதாக வும், இதற்கிடையில், விஜய் படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக திரையுலகில் பிரபலமான ஒரு நடிகரை வைத்து இயக்கும் இயக்குனர்களை, மற்ற நடிகர்கள் சீண்டுவதில்லை. இது நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அஜித்துக்கு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவாவை விஜய் படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விஜய் ஒரு படம் ஒன்று நடித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம். அந்த படத்தை சிவாவை வைத்து இயக்கலாமா என்று ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.