‘அடங்காதே’ படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கவுள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘க/பெ ரணசிங்கம்’ படத்துக்கு வசனம் எழுதியவர் சண்முகம் முத்துசுவாமி. அந்தப் படத்தில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

அந்த நட்பின் அடிப்படையில் சண்முகம் முத்துசுவாமியின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.