சென்னை,
தமிழகத்தின் பிரபல ஆன்மிக தலமாக விளங்கும் ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் பாம்பன் பாலம் மற்றும் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் போன்றவை உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் விமான தளம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.
சமீப காலமாக சேலம், திருச்சி போன்ற இடங்களில் இருந்து சிறிய ரக விமான சேவை தொடங்கி உள்ள நிலை யில், ராமேஸ்வரத்தில் இருந்தும் விமான சேவை தொடங்க இருப்பதாக தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மணிகண்டன், ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமான இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு விமான சேவை இயக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ராமேஸ்வம் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.