பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட எட்டு இடங்களில் இன்று இருவழி விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் இந்தியா இன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு இன்று தனது இருவழி விமான சேவைகளை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்திருந்தது.
“விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து விமான அதிகாரிகளிடமிருந்து வந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்கு படிப்படியாக விமானங்களைத் தொடங்க ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களில் செயல்பாடுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதில் எங்கள் குழு செயல்பட்டு வருவதால், இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்,” என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.”
முன்னதாக, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கு விமான சேவைகளைத் தொடங்குவதாக விமான நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.