சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார்.

அதன்படி கட்சியின்  அ.இ.பு.த.ம.மு.க’ . அதாவது னைத்துந்திய புரட்சித் லைவர் க்கள் முன்னேற்றக்ழகம். கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தொடங்கிய புதிய  கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.

‘இன்று  எனக்கு ஒரு முக்கியமான நாள். புரட்சித்தலைவர் மக்களுக்காக ஒரு கட்சியை தொடங்கினார். திமுக எனும் தீயசக்தியை வேரறுக்க அந்த கட்சியை வளர்த்தெடுத்தார். தமிழக மக்களுக்கு எவ்வளவோ நல்லதுகளை எம்.ஜி.ஆர் செய்தார். அவரை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் கொள்கைகளில் அடிபிறழாமல் பல மக்கள் நலத்திட்டங்களையும் பெண்கள் முன்னேற்றத்துக்குமான ஆட்சியை அம்மா கொடுத்தார்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது. தீயசக்தி திமுக தமிழக மக்களை கசக்கி பிழிந்து வருகிறது. இதையெல்லாம் பார்த்துதான் அம்மாவின் பிறந்த நாளில் கட்சிக்கு கொடியை அறிமுகப்படுத்தினேன். அம்மா மற்றும் புரட்சித்தலைவரின் மீது பற்றுக் கொண்ட ஒரு தொண்டர் ஆரம்பித்த கட்சியில் இப்போது இணைகிறேன். அந்த கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்.

நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். எனக்கு கிடைத்திருப்பது மக்களுடைய சின்னம், தென்னந்தோப்பு. தமிழகம், புதுச்சேரி இரண்டு மாநில தேர்தலிலும் போட்டியிடப் போகிறோம்.’ என்றார்.

ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன்.

வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு நாங்கள் எப்போதும் தோப்பு என அவர் விளக்கம் அளித்தார்.

[youtube-feed feed=1]