Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எடப்பாடியை முன்னிறுத்திதான் அதிமுக தேர்தலை சந்திக்கும்! ஆர்.பி.உதயகுமார்

Aug 12, 2020

மதுரை:  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு நடத்தப்பட உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர்பாளர் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.  இந்த நிலையில், தற்போதைய முதல்வர் எடப்பாடியை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  தமிழகத்தில் நடந்து முடிந்த மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட, சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக பணியாற்றி வெற்றி பெற்றோம். அதுபோலத்தான் உள்ளாட்சி தேர்தலில் அவர்களை முன்னிறுத்தியே வெற்று பெற்றோம். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை ஏற்கனவே நடைபெற்றுள்ள தேர்தலில்  நிரூபித்துள்ளார். அதனால் அடுத்தஆண்டு நடைபெற உள்ள சட்டமனற் தேர்தலை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக சந்திக்கும், முதல்வரை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும்,  இந்த அரசு பிழைக்குமா? என கேள்வி எழுந்த சூழலில், கடந்த 3 ஆண்டுகளை கடந்தும், எடப்பாடி தலைமையிலான அரசு, நிலையான அரசாக  செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

பாசனத்திற்காக பவானிசாகர் அணை 14ந்தேதி திறப்பு! முதல்வர் உத்தரவு!
கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து! மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer