சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து  வெளிநடப்பு  செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு ஏன் என்பது குறித்து செய்தியாளக்ரளிடம் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம், சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின பதில் அளிக்கிறார். இதனால், இன்று மற்றவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாது.

இந்த நிலையில், இன்று சபை கூடியதும், சட்டப் பேரவையில் விருதுநகர் பாலியல் குற்றத்தை கண்டித்து’ அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு உள்பட  பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி கோரினர். ஆனால், சபாநாயகர்  அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதனால் தங்களுக்கு பேச அனுதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டி’ தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த்து, தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், தங்களது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 97 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

மேலும், 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் வெளியான அறிவிப்புகளின் உண்மை நிலையை முதலமைச்சர் மறைத்துவிட்டார். நிதியமைச்சர் தந்த புத்தகத்தில் அதன் உண்மை நிலை இடம்பெற்றுள்ளது. அஇஅதிமுக அளித்த வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் ” என்றார்.

முன்னதாக ஓபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே கோப்புகளை வீசி எறிந்துவிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிநடப்பு செய்ததாக ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளதுடன்,   நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிநடப்பு செய்து அவமதித்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.