சென்னை: தமிழ்நாட்டில் விபத்துகள் குறைந்துள்ளது என்றும், நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் இன்று அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவை யில் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் விவாதத்துக்கு துறை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை நடைபெறற கேள்வி நேரத்தின்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட பொது நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்தார். அப்போது நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ரூ.1000 கோடி விடுக்கப்பட்டது. இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 31-ஆம் தேதிக்குள் தள்ளுபடி ரசீது தர திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், 28ம் தேதிக்குளேயே ரசீது தரப்படும் என நம்பிக்கை இருப்பதாகவும்  கூறினார்.

பின்னர் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  அமைச்சர் எ.வ.வேலு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சாலை விபத்துகள் 15% ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காரணமாகவே தமிழ்நாட்டில் விபத்து குறைந்துள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.