4 நாள் விசாரணை முடிவில் நள்ளிரவில் டிடிவி தினகரன் கைது!

Must read

AIADMK ‘two leaves’ symbol bribery case: TTV Dinakaran arrested

 

தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர் .சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் ;செவ்வாய்க் கிழமை (25ம்தேதி) நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

 

சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

 

தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நீடித்தது.

More articles

Latest article