சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி 127 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே முதற்கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், இன்று 127 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 150 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதுபோல, தே.ஜ.கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் நிறுவனர் பாரிவேந்தர்.

அதிமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்: 

கும்மிடிபூண்டி – திரு. V. சுதாகர்
பொன்னேரி (தனி) – திரு. P. பலராமன்
திருத்தணி – திரு. கோ. திருத்தணி
திருவள்ளூர் – திரு. ரமணா
மாதவரம் – திரு. V. மூர்த்தி
திருவொற்றியூர் – திரு. K. குப்பன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி) – திரு. K. பழனி
தாம்பரம் – திரு. சிட்லபாக்கம் இராசேந்திரன்
செங்கல்பட்டு –
செய்யூர் (தனி) – திரு. M. கஜேந்திரன் – திரு. E. ராஜசேகர்
மதுராந்தகம் (தனி) – திருமதி மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம் – திரு. V. சோமசுந்தரம்
அரக்கோணம் (தனி) – திரு. சு. ரவி
காட்பாடி – திரு. ராமு
ஆற்காடு – திரு. S.M. சுகுமார்
வேலூர் – திரு. அப்பு
அணைக்கட்டு – திரு. த. வேலழகன்
குடியாத்தம் (தனி) – திருமதி பரிதா புருஷோத்தமன்
வாணியம்பாடி – திரு. செந்தில்குமார்

ஆம்பூர் – திரு. வெங்கடேசன்
ஊத்தங்கரை – திரு. T.M. தமிழ்செல்வம்
பர்கூர் – திரு. கோவிந்தராசன்
கிருஷ்ணகிரி – திரு. K. அசோக்குமார்

உள்பட 127 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

எடப்பாடி உள்பட 23 வேட்பாளர்களுடன் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….

[youtube-feed feed=1]