அ.தி.மு.க. எங்களுக்கு எதிரிதான்!: மு.க.ஸ்டாலின்

Must read

சென்னை,

திமுக உயர்மட்ட குழு கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
அரசு நிலையாக இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குடிநீர் பஞ்சம் வறட்சி தலை விரித்தாடுகிறது. கூவாத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரச்சினைகளை கவனிக்காமல் முதல்வர் பதவியை தக்க வைப்பதிலேயே ஓ.பி.எஸ் ஈடுபட்டுள்ளார்.

சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க அழைக்க வேண்டு்ம் என்று சுப்பிரமணிய சுவாமி கூறுவதை அவரது பாஜக கட்சியே கட்சியே எதிர்க்கவில்லை.

தி.மு.க.வைப் பொறுத்தவரை அ.தி.முக எதிரிதான். பெரும்பான்மைப்படி ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

More articles

Latest article