சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு,  அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவிடம் அளித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ந்தேதி கூட்டப்பட உள்ளது. இதையடுத்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை குறித்து, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகரை சந்தித்து நினைவூட்டல் கடிதம் வழங்கினர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை உயர் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இருக்கையில் இருந்து மாற்றிவிட்டு, அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை கடிதத்தை அதிமுக தலைமை  சபாநயகரிடம் கொடுத்த நிலையிலும்,  சபாநாயகர் அப்பாவு  ஓபிஎஸ் இருக்கையை மாற்ற மறுத்து வருகிறார். சட்டப்பேரவையில் தனக்குதான் அதிகாரம் என முரண்டு பிடித்து வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் சட்டபேரவை கூட உள்ள நிலையில்,   எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை துணைத்தலைவர் அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர்  பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு,  அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கும் வகையில்  அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து,  நினைவூட்டல் கடிதம் அளித்தனர்.

தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்வி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக துணைக்கொறடா ரவி, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.