சென்னை:
சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.