சென்னை,
ன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்து எடுக்கப்பட்டதாக தவல்கள் வந்துள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதால், அதிமுகவின் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் சென்னைக்கு வர நேற்று இரவு கட்சி தலைமை அறிவுறுத்தியது.
appolloa
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.  அதை அறிந்ததும், சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, மருத்துவமனை சார்பில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சிகிச்சை குறித்து தகவல் கூறப்பட்ட தாகவும், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திய தாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க -வின் புதிய பொதுச்செயலாளராக ஒ.பன்னீர்செல்வம்  தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரி விக்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசு, தங்களுக்கு சாதகமாக இருக்கும் தம்பித்துரையை தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தம்பிதுரை இப்போது மக்களவை துணை சபாநாயகராகவும் இருக்கிறார் எனப்து  குறிப்பிடத்தக்கது.