அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் பின்னடைவு… சென்னையில் அதிமுக தோல்வி முகம்…

Must read

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,  சென்னையில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி முகத்தில் உள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட பெருந்தலைவர் கட்சித் தலைவர்   என்.ஆர். தனபாலன் பின்தங்கி உள்ளார்.,

சென்னை      கொளத்தூர்  தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  ஆதிராஜாராம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சென்னை   எழும்பூர் (தனி)   தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட    ஜான் பாண்டியன் பின்தங்கியுஙள்ளார்.

சென்னை  ராயபுரம்   தொகுதியில் போட்டியிட்ட அமைச்சசர்     டி ஜெயக்குமார் பின் தங்கியுள்ளார்.

சென்னை  துறைமுகம்  தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பின் தங்கியுள்ளார்.

சென்னை  சேப்பாக்கம் – திருவல்லிகேனி   தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், அமைச்சர் பெஞ்சமின்ன் போன்றோர் பின்னடைவை  சந்தித்துள்ளனர்.

More articles

Latest article