அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் – இன்று மீண்டும் விசாரணை

Must read

சென்னை:
திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்பு இடையே நடந்த மோதலில் 2 போலீசார் உட்பட 42 பேர் காயமடைந்தனர். பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர் சைதை பாபு அளித்த புகாரில் பேரில் அவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோதமான ஆயுதங்களுடன் கூடுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவில் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில், காவல் துறையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் தனிநபர் ஒருவர் உள்பட 47 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தின் உரிமையை கோருவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை என்பதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலரிடம் ராயப்பேட்டை ஆய்வாளர் அறிக்கை அளித்தார்.

இந்த மோதல் குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மோதல் தொடர்பாக, மோதல் குறித்து அறிக்கை அளிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article