சென்னை:

டிகர் விஜய் திமுகவில் சேர்ந்தாலும்,  அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது  என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் விஜய் சந்தித்து பேசிய பரபரப்பை ஏற்படுத்தி யது. தமிழக பாஜகவுக்கு ரஜினியை தலைவராக்க  ஒரு தரப்பினர்  முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி சீமானும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக அவ்வப்போது கொளுத்திப் போட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழக  முதல்வர், அமைச்சர்கள் ரகசியமாக வெளிநாடு செல்லவில்லை என்று கூறியவர்,. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட  தவிடுபொடியாகி விட்டது என்று கூறினார்.

மேலும், செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,   நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றவர், அமெரிக்கா ரஷ்யா அதிபர்களை  திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று நக்கலாகவும் கூறினார்.

தமிழக அமைச்சர் டில்லியில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்த கேள்விக்கு, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால், அதை கண்டிப்பாக ஏற்கமாட்டோம். பாதிப்பு எதுவும் வராதபட்சத்தில் அத்திட்டத்தை ஏற்போம் என கூறினார்.

தி.மு.க.வில் அளிக்கப்படும் பதவிகளுக்காக வேறு கட்சியினர் செல்வார்களே ஒழிய அ.தி.மு.க.வில் இருந்து யாரும் போகமாட்டார்கள்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.