சென்னை

மிழகத்துக்கும் சீனாவுக்கும் சுமார் 1700 வருடங்களாக உறவு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் முதல் கட்டம் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த சரித்திர நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். ஆனால் தமிழகத்துக்கும் சீனாவுக்குமான உறவு குறிப்பாக மாமல்லபுரத்துக்கும் சீனாவுக்குமான  உறவு 1700வருடப் பழமையானதாகும்.

பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் மாமல்லபுரம் ஒரு துறைமுகப்  பட்டினமாக விளங்கி வந்தது. அப்போது திபெத் பகுதிவரை சீன அரசு நீண்டிருந்தது. மாமல்லபுரம் வங்காள விரிகுடா பகுதியின் வர்த்தக நகரமாக விளங்கியது. கடந்த 8 ஆம் நூற்றாண்டு வரை இந்த துறைமுகம் மூலம் பல சீனப் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதைப் போல் இந்தியப் பொருட்களும் இங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

சீன அரசரும் பல்லவ அரசர் இரண்டாம் ராஜசிம்மன் மற்றும்  இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளனர். தெற்கு சீனப்பகுதிக்கு இரண்டாம் நரசிம்மவர்மன் திபெத் பாதுகாப்பை முன்னிட்டு தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த தகவலைப் போதி தர்மா என்னும் சரித்திர நூலை எழுதிய கயல் பராபவன் உறுதிசெய்துள்ளார். அது மட்டுமின்றி இந்த புத்தகத்தில் பராபவன் இரு அரசுக்கும் இடையில் இருந்த வர்த்தகம் குறித்தும் எழுதி உள்ளார்.

சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, “புத்த மதத் துறவியான போதி தர்மர் சீனாவின் ஒரு அங்கமாகக் கருதப்படுபவர் ஆவர். அவர் பல்லவ அரசின் மூன்றாமிளவரசர் ஆவார். அவர் காஞ்சிபுரஹ்ட்தில் இருந்து  மாமல்லபுரம் வழியாகக் கடந்த 527 ஆம் வருடத்தில் சீனாவுக்குச் சென்றுள்ளார், அவர் புத்தமதத்தின் 28 ஆம் குருவாக பிரஜனதாராவுக்கு பிறகு பதவி ஏற்றார்.” எனத் தெரிவித்துள்ளார்.

”போதி தர்மரை மையமாக வைத்து ஒரு சுற்றுலா திட்டத்தைச் செயல்படுத்தினால் அது  சீனர்கள், ஜப்பானியர்கள் தாய்லாந்தினர் உள்ளிட்ட பயணிகளைப் பெரிதும் கவரும். போதி தர்மர் இந்த பகுதியில் வாழும் புத்தமதத்தினருக்கு ஒரு ஆதர்ச நாயகன் ஆவார்” எனத் தமிழ்நாடு சுற்றுலா அமைப்போர் சங்கத் தலைவர் பாலன் தெரிவித்துள்ளார்.

சோழர்கள் ஆட்சிக் காலம் வரை சீனர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் உறவு இருந்ததாகச் சரித்திர வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சோழர் காலத்தில் நாகப்பட்டின துறைமுகம் பிரபலமாக  விளங்கியது. அதைப் போல் தஞ்சை நகரம் தென் கிழக்கு ஆசிய நாடுகளை மிகவும் ஈர்த்தது. பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரம் புகழ் மங்கத் தொடங்கியது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.