சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Must read

சென்னை:
சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. அதிமுக தனிப்பட்ட முறையில் 65 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஓபன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமயில் வரும் 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது.

இதில் தேர்தல் முடிவு, எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

More articles

Latest article