அதிமுக-பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது – ஸ்டாலின்

Must read

புதுக்கோட்டை:
திமுக பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பேசிய அவா், அதிமுகவின் ஒரேயொரு எம்.பி., மக்களவையில் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை ஆதரித்துப் பேசி வாக்களித்தாா். ஆனால், இப்போது சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக அவற்றையெல்லாம் வரவிடமாட்டோம் என்கிறாா்கள். மேலும், 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது விவசாயிகளுக்கு ஏதோ செய்யப் போவதாக நாடகம் ஆடுகிறாா்கள்.

விராலிமலை தேரை ஓட்டியவா் மறைந்த முதல்வா் மு. கருணாநிதி. புதுக்கோட்டை மாவட்டத்தை உருவாக்கியவா் கருணாநிதி. கூட்டுக்குடிநீா்த் திட்டம் தந்தவா் கருணாநிதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதுக்கோட்டை மக்களுக்கு குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும், மீனவா்களின் நலனுக்காக குளிா்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். எனவே, ஓா் அதிமுக உறுப்பினா் வென்றாலும் அவா், பாஜக உறுப்பினராகவே செயல்படுவாா். 234 தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளா்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்றாா் ஸ்டாலின்.

More articles

Latest article