சென்னை,
இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், வரும் 8ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தனது உரையுடன் கூட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக அரசின் பெரும்பான்மை குறித்து திமுக கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக சட்டசபையில் ஏற்பட உள்ள சலசலப்பு மற்றும் சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுக சார்பில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் 12 பேர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மட்டுமே அதிமுக சார்பாக நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் விவாதங்களில் கலந்துகொண்டு அதிமுக கருத்துக்களை தெரிவிப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்)
2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்)
3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்)
4. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்)
5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்)
6. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்)
7. ம.அழகுராஜ் (எ) மருது அழகுராஜ் (நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தற்போது அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழின் ஆசிரியர்)
8. கோவை செல்வராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)
9. பேராசிரியர் தீரன் (எ) ஏ.ராஜேந்திரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம் வடக்கு மாவட்டம்)
10. கே.சி.பழனிச்சாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாவட்டம்)
11. ஏ.எஸ்.மகேஸ்வரி (கோவை மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)
12. ஆர்.எம்.பாபு முருகவேல் (ஆரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்)