சென்னை,

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆண்டு வருமானத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ப.சி.சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருமான வரித்துறையினரின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

கடந்த 2010-11ஆம் ஆண்டின் போது ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின்  வருமானத்தை மறுஆய்வு செய்யவேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மனு  தாக்கல் செய்திருந்தனர்.

அந்த  மனுவில் தங்களுக்கு  கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள கூர்க் என்ற இடத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள எஸ்டேட்டில் விளையும் காபிக் கொட்டை, மிளகு உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் கிடைப்பதாக கூறியுயிருந்தனர்.

மேலும், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 10(1)-ன் படி வரிச்சலுகை வழங்கப்படுவ தால், தாங்கள்  கடந்த 2010-11ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போததே இது குறித்துதெரிவித்து, வரிச்சலுகையை பெற்றோம் என்றும், இந்த கணக்கை தற்போது மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 7 ஆண்டுக்கு பிறகு தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி, ஆகவே வருமான வரித்துறையினரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், வருமான வரித்துறை கூறியுள்ள குற்றச் சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் பாரபட்சமானது, சட்டவிரோதமானது.

எனவே, ப.சிதம்பரம் உள்பட 4 பேருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.