மும்பை,

நாட்டில் தற்போது, விவசாயக் கடன் தள்ளுபடி என்பது பேஷனாகிவிட்டது என்று மத்திய வெங்கையா நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.

வறட்சி காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளை கோரி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர், விவசாய கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்தார்.

இதற்கிடையில்  ம.பி., மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு

மிக அரிதான சூழலில் மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அதுவே விவசாயிகளின் பிரச்னைக்கு இறுதி தீர்வாகாது எனவும் கூறினார்.

மேலும், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது

கர்நாடகா, உத்தரப் பிரதேச அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளன என்றும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தற்போது பேஷனாகி விட்டது என்றும் காட்டமாக கூறினார்.

வெங்கையாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.