லக அதிசயமான தாஜ்மஹாலை பாதுகாக்கும் ஆக்ரா நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நானூறை தாண்டி விட்டது.

‘’ இங்குள்ள அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் ’10 நிமிடம் வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு மட்டும் செல்கிறார்கள்’’ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை சொல்வது வேறு யாரும் அல்ல.

ஆக்ரா நகரின் பா.ஜ.க.மேயரான நவீன் ஜெயின் தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
‘’இதே ரேஞ்சில் போனால், சீனாவின் ‘’ஊகான்’’ நகருக்கு ஏற்பட்ட கதிதான் ஆக்ராவுக்கு உண்டாகும்’’ என்று ஆக்ரா மேயர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

’’ நமது அரசை மக்கள் சாபமிடுகிறார்கள்..’’ என்றும் புலம்பியுள்ளார் அவர்.

பா.ஜ.க.மேயரின் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

‘’ ஆக்ராவில் உள்ள நிலைமை மோசமாகத்தான் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார், பிரியங்கா.

‘’ உடனடியாக தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிட்டால் அங்கு நிலை, கை மீறி போய்விடும்’ என ஆக்ரா மேயர் ஜெயின் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தை தனது ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ள பிரியங்கா ‘’அது உண்மைதான். ஆக்ராவில் கொரோனாவை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை களை எடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.