‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம்: பொதுமக்களே உஷார்!

Must read

சென்னை,

ன்று முதல் தமிழ்நாட்டில் அனல்காற்று வீசும் என்றும், வரும் 4ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

பருவமழை பொய்த்து போனதன் காரணமாக நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது ஆறு குளங்களில் தண்ணீரின்றி மக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் அல்லாடுகின்றன.

இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

மழை  பொய்த்ததன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதலே தமிழகத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

கடந்த மாதம் முதலே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து  காணப்படுகிறது.  சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில், கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் வருகின்ற 4-ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குவதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

அனல் காற்று

அதேபோல், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றுமுதல் அனல்காற்று வீச்சு என்று  பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அனல் காற்று பகல் 12 முதல் மாலை 3 வரை அனல் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் இயக்குநர்  தமிழகத்தின் 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசவுள்ளது.

இதையடுத்து மதியம் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்  தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குநர் கீதா.

More articles

Latest article