புதுடெல்லி:
க்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று காகிராஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்னிபாத் திட்டம் பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி என்றும், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒரு பக்கம் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபக்கம், அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இது வரை நடைபெற்ற ஆட்கள் தேர்வில் லட்சக்கணக்கானோர் அக்னிவீர் பணிக்காக விண்ணப்பித்து உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில், அக்னி வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று காகிராஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பிரதமரின் புதிய பரிசோதனையால் நாட்டின் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது என்றும், ஆண்டுதோறும், 60,000 ராணுவ வீரர்கள் ஒய்வு பெறும் நிலையில், 3,000 பேர் மட்டுமே அரசு வேலை பெறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.