டில்லி
டவ்தே புயலுக்கு அடுத்தபடியாக யாஷ் என்றொரு புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 17 ஆம் தேதி அன்று குஜராத்தில் கரையைக் கடந்த டவ்தே புயல் நாடெங்கும் கடும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலங்களான, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.
இந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் ” வரும் 22ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அடுத்த 72 மணி நேரத்தில் அது வலுப்பெற்று, வடக்கு மேற்காக நகரும்.
அந்த புயல் வரும் 26ம் தேதி மாலை மேற்கு வங்கம் ஒடிசா கடலோரப் பகுதியில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. இப்புயலுக்கு யாஷ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுளளது.