சென்னை,

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஐபிஎல் 5-வது லீக் ஆட்டம் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்& -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிமுதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் வகையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர போரட்டம் மைதானத்திற்கு வெளியே நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. தீவிர சோதனைக்கு பிறகே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.