இணையத்தில் பிரபலமான தக்காளி விற்கும் அழகுப்பெண்

Must read

tarkariwali1

நேபாளத்தை சேர்ந்த தக்காளி விற்கும் ஒரு அழகான பெண்ணின் நிழற்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

tea_master

பாகிஸ்தானைச் சேர்ந்த டீ  மாஸ்டர் அர்ஷத்கான்

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத்கான் என்ற டீ மாஸ்டரின் நிழற்படம் இணையங்களில் வெளியாகி பிரபலமடைந்தது. அழகான நீல நிறக் கண்களோடு இருந்த அந்த இளைஞர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். பின்னர் அவரை பாகிஸ்தான் டிவி பேட்டி எடுத்தது. இப்போது அவர் விளம்பரங்களில் மாடலாக நடிக்குமளவுக்கு பிரபலமாகிவிட்டார்.

cwkl9_6xeaejnzw

தக்காளி விற்கும் அப்பெண்ணின் இயற்கையான அழகும் கடின உழைப்புமே அவர் பலரது கவனத்தையும் ஈர்க்க காரணமாக அமைந்துள்ளது. அவர் கேஷுவலாக யாரிடமோ செல்போனில் பேசுவது போலவும், ஒரு கயற்று பாலத்தின் வழியாக தக்காளி மூட்டையை சிரித்துக்கொண்டே சுமந்து வருவது போலவும் வெளியான நிழற்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.
சிலர் டீ மாஸ்டர் அர்ஷத்கானும், நேபாளத்து தக்காளி விற்கும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article