‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின் தலைமுடி குறித்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் அடித்த கமென்டிற்கு நிகழ்ச்சி மேடையில் அறைவிட்டார் வில் ஸ்மித்.

இதனைத் தொடர்ந்து வில் ஸ்மித்தை 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வில் ஸ்மித் நேற்று மும்பை வந்து இறங்கியதாகவும் ஜூஹூ-வில் உள்ள மரியாட் ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர் ஈஷா மைய்ய சத்குருவை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

மும்பை விமான நிலையத்தில் வில் ஸ்மித்

 

ஈஷா மைய்யத்தின் உறுப்பினரான வில் ஸ்மித், படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே பலமுறை இந்தியா வந்துள்ளார், கடைசியாக 2019 ம் ஆண்டு இந்தியா வந்தபோது ஹரித்வாரில் நடைபெற்ற கங்கா ஆரத்தியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.