போபால்:

கோட்சே குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக போபால் வேட்பாளர் சாமியிரினி பிரக்யா சிங்குக்கு பாஜக தலைமை குட்டு வைத்த நிலையில்,  தேர்தல் முடியும் வரை மவுன விரதம் இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

கோட்சே குறித்து பேசி சர்ச்சையை கமல் ஏற்படுத்தியதை தொடர்ந்து, இளம்பெண் சாமியார் பிரக்யா சிங்,  கோட்சே ஓர் உண்மையான தேசபக்தர் கூறினார். இது மேலும் பிரச்சினையை  ஏற்படுத்திய தொடர்ந்து,  பாஜக தலைமை பிரக்யா சிங்கை கண்டித்ததை தொடர்ந்து, பிரக்யாசிங் தனது கருத்தை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இது சுய பரிசோதனைக் கான நேரம். நான் கூறிய கருத்துக்கள் தேசத்தின் உணர்வை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். அதுக்கு பிராயசித்தமாக தேர்தல் முடிவுகள் வரும் வரை 3 நாட்கள் மவுன விரதம் மேற்கொள்ளப்போகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.