திருவனந்தபுரம்:

கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதில் அரசியல் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


கேரள மாநிலம் கசர்கோடு அருகே பெரியா என்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சரத்லால் மற்றும் கிரிபேஸ் ஆகியோர் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி குத்திக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் கஞ்சன்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், இந்த கொலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளர் உட்பட 14 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயலில் பல அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

900 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், 229 சாட்சிகளும், 105 ஆதாரங்களும், 50 ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பீதாம்பரம் என்பவர் சார்ஜாவுக்கு தப்பி ஓடினார். அவரை கைது செய்த போலீஸார், விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், கொலையான இருவரும் என்னை தாக்கினார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் எங்கள் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தேன்.

அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், நானே அவர்களை கொல்ல ஆட்களை அமர்த்தினேன் என்று தெரிவித்துள்ளார்.