Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழகத்தில் 5மாதங்களுக்கு பிறகு வழிப்பாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன, பேருந்து போக்குவரத்தும் தொடங்கியது, …

Sep 1, 2020

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட  போக்கு வரத்து மற்றும் வழிப்பாட்டு தங்கள், சுமார்  5 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரானா பொதுமுடக்கத்தில் இருந்து, பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, இன்று முதல் வழிப்பாட்டுத் தலங்கள், பொது போக்குவரத்து, மால்கள் உள்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது.

இதனால் இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கி உள்ளன. சென்னையில்,  இன்று 3,300 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார்  20 ஆயிரம் பஸ்கள் இன்று மூதல் இயங்கும் என மாநில போக்குவரத் துத் துறை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு பேருந்துகளிலும்,  24 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும், பயணிகளுக்கு முகக்கவசம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்களில் பின்பக்க மாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும்போது பட்டிக்கட்டின் பக்கவாட்டில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும். பயணிகள் அந்த கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், பயணிகள் கண்டிப் பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பயணிகள் பஸ்களில் இருந்து எச்சில் துப்புவதற்கும் அனுமதிக்கப்படுவது இல்லை.

இதே போன்று, பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கைகளில் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு தான் பஸ்களை இயக்க வேண்டும். மேலும், பஸ்கள் பணிமனைகளில் இருந்து புறப்படும் போதும், இரவு பணிமனைக்கு வரும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என்றும், பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பஸ் நிலையங்களில் வைத்து கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால்,  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இன்றுமுதல் தமிழகம் முழுவதும் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் அதிகாலை முதலே திறக்கப்பட்டுள்ளன. சென்னையின் பிரபலமான கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோயில்களும் திறப்பப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் சமூகஇடைவெளியுடன், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி, திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோவில்களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

5 மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்கள் தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post navigation

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?  கொடி மரத்தை ஏன் விழுந்து வணங்க வேண்டும்?
பக்தகோடிகளே, பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்…

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer