கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?  கொடி மரத்தை ஏன் விழுந்து வணக்க வேண்டும்? என நமது முன்னோர்கள் ஏன் கூறினார்கள், அதன் அறிவியல் பூர்வமான உண்மை என்ன..

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்போம், நம்மில் பலரும் கோவிலுக்கு செல்லும்போது, வாசல் படியை தொட்டு கும்பிட்டு சென்றிருப்போம்…

கோவிலின் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். முன்னோர்கள் இதை ஏன் வழிபாடாக அறிவுறுத்தி இருக்கிறார்கள், அதன்  அறிவியல் பூர்வமான  நோக்கம் என்ன என்பதை பார்க்கலாம்…

ஒருவர், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.

குனிவதால், அவரது  உடம்பில் உள்ள சூரிய நாடியை இயங்க வைக்கிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.  அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

இதற்காகவேதான் நம் முன்னோர்கள், வழிபாடு முறைகளை நிர்ணயித்து உள்ளார்கள். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்கவே, முன்னோர்களின் செயல்கள் அமைந்துள்ளது.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது, நாம் குனிந்து கோவில் படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்…

கொடிமர நமஸ்காரம்  ஏன்?

முன்னோர்களும், ஆன்மிகவாதிகளும் கோவிலில் உள்ள கொடி மரத்துக்கு, சாஷ்டாங்க நமஸ்காரத்தை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார்களே ஏட்ன?  கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்ய சொல்வதற்கான காரணம் என்ன?

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று  இரண்டு காரணங்களை சொல்கிறது ஆன்மிகம்.

ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம்.

மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும்.

நாம் கொடி மரத்தை நமஸ்காரம் செய்யும்போது, அருகே உள்ள பலிபீடத்தன் மீது, நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை பலியிடுவதாக,  அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம்.

இதனால்தான் முன்னோர்கள், கோவில் கொடி மரம் அருகே  சாஷ்டாங்க நமஸ்காரத்தை  வலியுறுத்தி உள்ளார்கள்.

இனிமேல் கொடி மரம் அருகே நமஸ்காரம் செய்யும்போது, நமது உள்ளங்களில் இருந்து தீய எண்ணங்ள் அகலுமாறு வேண்டிக்கொண்டு நமஸ்காரம் செய்வோம்.