சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடித்தார் ஸ்ருதி ஹாசன். அதன்பிறகு பாய்பிரண்டுடன் டேடிங், பிரேக் அப், மேற்கத்திய இசை மேடைகளில் உலா என கவனத்தை திருப்பிய ஸ்ருதி சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு நடிக்க முடிவு செய்து விஜய் சேதுபதியுட,ன் லாபம் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் ரவிதேஜாவுடன் கிராக் என்ற தெலுங்கு படத்தில் படத்தில் நடித்தார், இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங் கால் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் ஒடிடி டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதற்கான பேச்சு வார்த்தை டிஜிட்டல் தள நிறுவங்களுடன் பட தரப்பு நடத்தி வருகிறது.
ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2 வருடத்துக்கு பிறகு வெளியாகும் இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஒடிடியில் ரிலீஸ் ஆவது குறிப் பிடத்தக்கது,