டில்லி:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக இடையில் சில காலம் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் நிகழாமல் இருந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் முதல் தினசரி விலை உயர்ந்து வந்தது.

கடந்த 16 நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று 60 பைசா குறைந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  ‘‘உடல் பயிற்சி குறித்து விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. அதேபோல் பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்க சாவல் எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை 60 காசுகள் குறைந்துள்ளது. டில்லியில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 60 பைசாவும், மும்பையில் லிட்டருக்கு 59 பைசாவும் குறைந்துள்ளன.

இன்றைய பெட்ரோல் விலை:

டில்லி::ரூ. 77.83 per liter;

மும்பை: ரூ.  85.65 per liter;

கொல்கத்தா: ரூ. 80.47 per liter;

சென்னை: ரூ. 80.80 per liter

மததிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பெட்ரோல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நிலையில், இன்று லிட்டருக்கு 80 பைசா குறைந்ததுள்ளது.

மேலும் உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலையும் குறைந்து வருவதால், மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.