சென்னை: அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் இனிமேல் பேரணி, அணிவகுப்பு ஊர்வலங்கள் போன்றவை நடத்த முன்வைப்பு தொகை பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. பேரணி, அணிவகுப்பு நடத்தும் அமைப்புகளிடம் இருந்து முன்வைப்பு தொகை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு போலீஸார் நிபந்தனையுடன் அனுமதி வழங்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனுமதி வழங்காததை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தி்ல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிஜி.ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு,பேரணிக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும், நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றும் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதையேற்று இந்த அவமதிப்பு வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது.
அதேபோல இனி வரும் காலங்களில் அணிவகுப்பு மற்றும் பேரணிகள் நடத்தும்போதுபேனர்கள் மற்றும் பதாகைகள் எடுத்துச்செல்வதாக இருந்தால்அதற்கான முன் வைப்புத்தொகையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருந்து அரசு பெற வேண்டும். ஏதேனும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால்அந்த தொகையை அரசுதிருப்பி வழங்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, விஜயதசமி, 75வது சுதந்திரம் மற்றும் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் வகையில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) உடன் இணைந்த கரசேவகர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டு மாபெரம் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு விவகாரத்தில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கிடையில், சில பகுதிகளில் பேரணி நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர்நீதிமன்றம் பேரணி நடத்துபவர்களிடம் முன்பணம் பெற தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.