சென்னை
இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக அணிகள் களத்தில் உள்ளன. இவை தவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணியும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.
இன்று அதிமுக வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :
- அனைத்து கல்லூரி மாணவரக்ளுக்கும் வருடம் முழுவதும் தினசரி 2ஜிபி டேட்டா இலவசம்
- கல்விக் கடன்கள் தள்ளுபடி
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரேஷன் பொருட்கள் வீட்டிலேயே விநியோகம்
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாஷிங் மெஷின் இலவசம்
- மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம் உயர்வு
- நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாய மையம்
- பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நடவடிக்கை
- அம்மா வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடுகள்
- இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பு
- மகளிருக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை
- ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி
- அனைத்து மத வழிபாட்டு தலங்களும் புதுப்பித்தல்
- மதுரை விமான நிலையத்துக்கு பசும்போன் முத்துராமலிங்க தேவர் பெயர்
- ஹஜ் மற்றும் ஜெருசலேம் செல்ல உதவித் தொகை அதிகரிப்பு
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு அதிகரிக்க மினி ஐடி பூங்காக்கள் தொடக்கம்
- கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை
- நெசவாளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி
- பள்ளி மாணவர்களுக்கு தினமும் 200 மிலி பால் மற்றும் பால் பவுடர் இலவசம்
- அரசு கேபிள் டிவி கனெக்ஷன் இலவசம்
- மகளிருக்கு அரசு பேருந்துகளில் 50% கட்டண தள்ளுபடி
- மஞ்சள், கரும்பு, நெல், வாழை, சிறு தானியங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆதார விலை உயர்வு
- அனைவருக்கும் சோலார் அடுப்பு இலவசம்
- ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு
- 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு திட்டம் விஸ்தரிப்பு
என பல அம்சங்கள் காணப்படுகின்றன.
ஏற்கனவே இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 1500 மற்றும் 6 காஸ் சிலிண்டர்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது