சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6  தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

காட்டுமன்னார்கோவில் (தனி) – சிந்தனைச் செல்வன்

வானூர்- வன்னியரசு

அரக்கோணம் (தனி) – கௌதம சன்னா

செய்யூர் (தனி) – பனையூர் பாபு

திருப்போரூர் – எஸ் எஸ் பாலாஜி

நாகப்பட்டினம் – ஆளூர் ஷாநவாஸ்