சென்னை,
சிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்மையான அதிமுகவின்  தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, ஜெ.வின் அண்ணன் மகளான தீபா, விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுகவின்  எதிர்கால நலன் கருதி சரியான நேரத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பேன் என்றும், மறைந்த எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அமைதியுடன் பொறுமை காக்க வேண்டிய தருணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நல்லது நிச்சயம் நடக்கும், அதற்காக ஒவ்வொருவரும் பொறுமைகாக்க வேண்டும் என்பதே இந்த தருணத்தில் தனது தாழ்மையான வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Also read

 

[youtube-feed feed=1]