சென்னை

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழக பெயர் மாற்றுவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நிதி குறித்த தீர்மானம் தவிர மற்ற தீர்மானங்கள் அனைத்தையும் ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். 

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெயரில் இருந்த மீன் வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. இதைக் கடுமையாக எதிர்த்து அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.