சென்னை

திமுக சார்பில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்து விடுதலையானவருமானவர் சசிகலா.  தாம் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்த பிறகும் தொடர்ந்து  அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்து வருகிறார்.  சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

கடந்த 17 ஆம் தேதி அன்று சென்னை தி நகரில் உள்ள எம் ஜி ஆர் நினைவு இல்லத்துக்கு சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் சென்றுள்ளார்.  அங்கு அவர் அதிமுக கொடியை ஏற்றி அக்கட்சியின் பொன்விழா கல்வெட்டைத் திறந்து வைத்தார்.  கல்வெட்டில் அவர் பெயர் கழக பொதுச் செயலாளர் சசிகலா என இருந்தது.

இது குறித்து சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் அவர் கல்வெட்டில் பொதுச் செயலாளர் என சசிகலா பெயர் இடம் பெறக்கூடாது எனவும் அதிமுக பெயரை ச்ட்டவிரோதாமக பயன்படுத்தும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி உள்ளார்.

ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்,

“சசிகலா அதிமுகவில் குழப்பத்தை உண்டாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எண்ணுகிறார்.  அவருடைய நடவடிக்கைகள் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிரானது.  அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது..   சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வது மூஅம் ஜெயலலிதா ஆக மாற முடியுமா?  ஊடகங்கள் மட்டுமே சசிகலாவால் பதற்றம் அடைகிறதே தவிர அதிமுகவினர் பதற்றம் அடைவதில்லை” 

எனக் கூறி உள்ளார்.